தமிழக அரசின் விரைவுப் பேருந்துகளில் அசத்தலான வசதி - அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் (SETC Buses) இருப்பிடத்தினை 'சென்னை பஸ் செயலி' (Chennai Bus App) மூலம் அறிந்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அமைச்சரின் செய்திக்குறிப்பில், "தற்போது மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் GPS பொருத்தப்பட்டு பேருந்துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை சென்னை பஸ் செயலி (Chennai Bus App) மூலம் கைபேசியில் அறிந்து கொள்ள முடிகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளிலும் GPS பொருத்தப்பட்டு Chennai Bus App மூலம் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் வந்து கொண்டிருக்கும் இடம் மற்றும் குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் என்பதை எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

அத்துடன் பேருந்து தடம் குறித்த Search Route option-யை Click செய்து குறிப்பிட்ட வழித்தட எண்களில் இயங்கும் அனைத்து பேருந்துகளின் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேவையான தடத்தினை தேர்ந்தெடுத்து Click செய்வதன் மூலம் தற்போது அந்தத் தடத்தில் வருகின்ற பேருந்துகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

பேருந்தின் நிகழ்நிலை இருப்பிட விவரத்தின் பகிர்வு (Live Location sharing) மூலமாக பயணம் செய்யும் பயணிகள் தங்கள் இருப்பிட விவரத்தினை பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுந்தகவல் (S.M.S) மூலமாக அனுப்பும் வசதி உள்ளது. பயணிகள் தங்களது பயணம் குறித்த கருத்துக்களை (Feed Back) பதிவு செய்து அனுப்பும் வசதியும் உள்ளது.

மேலும், இச்செயலி மூலம் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி மூலம் முன்பதிவு செய்த பயணிகளுக்கு SMS அனுப்பப்படும் Link-யை கிளிக் செய்வதன் மூலம் அவர்களது முன்பதிவு செய்த பேருந்து எந்த இடத்தில் வருகிறது என்ற விபரத்தையும் அறியலாம்.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையங்களில் பேருந்துகளின் வருகையினை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப புறப்பாட்டினை திட்டமிட இச்செயலி பயன்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SETC bus GPS option mobile app


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->