"நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது” சரக்கு விற்ற திமுக நிர்வாகி மிரட்டல் - அண்ணாமலை கண்டனம்!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே, திமுக நிர்வாகி பிரசாந்த், அவரது அம்மா மற்றும் சகோதரர் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும், "நான் அமைச்சர் ஆள், ஆட்சி எங்களுடையது” என்று கூறி காவல்துறை அதிகாரிகளை மிரட்டுவதால், மேச்சேரி காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக நிர்வாகிகள், சட்டத்தையும், காவல் துறையையும் அச்சுறுத்துவது சாதாரணமாகி விட்டது. திமுக ஆட்சியில், சட்டம், திமுகவினரின் முறைகேடான செயல்பாடுகளுக்கே துணை நிற்கிறது.
திமுக கட்சியில் இருந்தால், என்ன குற்றம் செய்தாலும் நடவடிக்கை இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இது திமுக ஆட்சியில் நடைபெறும் அதிகார துஷ்பிரயோகத்தின் மற்றுமொரு உதாரணம். குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், உடனடியாக இந்த சட்ட விரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவே சட்டமும், காவல்துறையும். ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்குத் துணை நிற்பதற்கு அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin