தீய சக்தி திமுக துரோகம்... திராவிடமாடலின் அகம்பாவத்தை தமிழன் ஒடுக்குவான் - பாஜக பதிலடி!
bjp narayanan condmen to dmk mk stalin
திராவிடமாடலின் அகம்பாவத்தை தமிழன் ஒடுக்குவான் என்று, திமுக தலைவர், முதலவர் முக ஸ்டாலினுக்கு, பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அந்த 'டப்பா எஞ்சின்' தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்று தினமும் கெஞ்சிக் கேட்பது நீங்கள் தானே?
வரலாறு பேசும் வளர்ச்சி என்றால் என்ன? போதை பொருட்களின் அதீத புழக்கம், ஓடும் சாராய ஆறு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, குற்றங்கள் அதிகரிப்பு, அதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, பொருளாதார சீர்கேடு போன்றவை தானே திராவிட மாடல் வீழ்ச்சியின் வரலாறு!
கொஞ்சம் யோசிச்சு பாருங்க..
நீங்கள் சொல்லும் 'டப்பா எஞ்சின்' உள்ள மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை விட மிகப் பின் தங்கி இருந்த நிலையில், கடந்த பத்து வருடங்களில், வளர்ச்சியில் தமிழகத்தை நெருங்கி வருவதை உணராது இருப்பதால் தான் தமிழகத்தின் வீழ்ச்சியை உங்களால் உணரமுடியவில்லை.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தீய சக்தி திமுக செய்த, செய்து கொண்டிருக்கிற, செய்யப் போகிற துரோகங்களை, வஞ்சகங்களை, கேடுகளை, தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
திராவிடமாடலின் அகம்பாவத்தை தமிழன் ஒடுக்குவான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp narayanan condmen to dmk mk stalin