செந்தில்பாலாஜி மனு: தீர்ப்பு தேதியை ஒத்திவைத்த நீதிபதி! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு சென்னை சென்சஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணை முடிவடையும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை தொடங்கக்கூடாது எனவும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். 

இந்த மனு நேற்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதாடினார். 

இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை முடக்கி குற்றச்சாட்டு பதிவையும் சாட்சி விசாரணையும் தாமதப்படுத்தும் நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல என தெரிவித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த மனு 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அவரது நீதிமன்ற காவலையும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthilbalaji custody extended till


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->