செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி திருப்பம்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு!
Senthilbalaji Case chennai HC New Order 04092023
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க மறுத்தன.

இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இது எந்த நீதிமன்றம் விசாரணை நடத்துவது என்பது குறித்த முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வின் முன்பு செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் இளங்கோ முறையிட்டார். .
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு என்றும், அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவையும் விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
Senthilbalaji Case chennai HC New Order 04092023