மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு கால அவகாசம்..!! அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு பெற்ற அனைத்து நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதி உடன் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க மக்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைகிறது. இதனால் ஆதார் எண் இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் 2 நாட்களில் ஆதார் எண் இணைக்க கால அவகாசம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji said timelimit will be extend for EB link with aadhar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->