கடந்த 8 நாளாக நடந்த ஐடி ரெய்டு நிறைவு - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில், கடந்த எட்டு நாளாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை சற்று முன்பு நிறைவடைந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், செந்தில் பாலாஜி நண்பர், திமுக நிர்வாகி, கவுன்சிலர், ஒப்பந்ததாரர், தொழிலதிபர், நிறுவனம் உள்ளிட்டவைகளில் கடந்த எட்டு தினங்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது.

சென்னை, மதுரை, கோவை, கரூர் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது ஒப்பந்ததாரர் சங்கர் என்பவரின் அலுவலகம், செந்தில் பாலாஜியின் நண்பர் மணி என்பவரின் இரண்டு இடங்கள் உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமார் விசாரணைக்கு  நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கரூரை சேர்ந்த வழக்கறிஞர் செங்கோட்டையன் என்பவரின் அலுவலகத்தில் இருந்து இரண்டு அட்டைப் பெட்டிகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரூரை சேர்ந்த பொறியாளர் பாஸ்கர் என்பவரின் வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த எட்டு நாடக நடைபெற்ற வருமான வரி சோதனை இன்று பிற்பகல் 3 மணி அளவில் நிறைவு பெற்றுள்ளதாக, கரூர் மாவட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senthil Balaji DMK Karur IT Raid End now


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->