மாப்பிள்ளை பார்த்ததால் மன உளைச்சல்.. பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் பெண் டாக்டர் தனக்குத்தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தர்மபுரி கடைவீதி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவருடைய மகள் மோனிகா பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு  தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். 27 வயதான மோனிகா நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார்.

அப்போது ஆஸ்பத்திரியில் அவர் இருந்த அறை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி நிர்வாகம், தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து  போலீசார் வந்து கதவை உடைத்து  பார்த்தனர். அங்கு டாக்டர் மோனிகா அசைவற்ற நிலையில் கிடந்தார்.

அப்போது  டாக்டர் பரிசோதித்த போது மோனிகா பரிதாபமாக இறந்து இருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் பெண் டாக்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடும்பத்தினர் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மோனிகாவிற்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்ததும்  ஆனால் அவருக்கு  விருப்பமில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இருந்தாலும் மோனிகா இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது  பெண் டாக்டர், தனக்குத்தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeing the groom caused distress The female doctor made a horrific decision


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->