ரகசிய தகவல் காவலர்களை அதிரவைத்தது! -ஆட்டோ டிரைவரின் பின்வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு...! நடந்தது என்ன?
Secret information shocked police Ganja plants growing back house auto driver What happened
தென்காசி வேதம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனின் மகன் 45 வயதான திருமலைகுமார் , ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக காவலருக்கு ரகசிய தகவல் கிட்டியது. அதனைத் தொடர்ந்து, காவலர்கள் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த வீட்டுக்குள் சோதனை செய்தபோது எதுவும் கைக்கிடைக்கவில்லை. ஆனால், சந்தேகத்தின் பேரில் பழைய வீட்டு பின்புறம் சென்று பார்த்த போது, பூச்செடிகள் போல தொட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் செழித்து வளர்ந்திருப்பதை காவலர்கள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் திருமலைகுமாரை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், அவர் கஞ்சா விதைகளை வேறு ஒருவரிடம் இருந்து வாங்கி வந்து, தினமும் தண்ணீர் ஊற்றி பாசமுடன் பராமரித்து வந்தது தெரியவந்துள்ளது.
மேலும்,வளர்ந்த பிறகு, அந்த கஞ்சாவை தனக்குத் தேவையான அளவில் பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.தற்போது, கஞ்சா விதைகளை வழங்கிய மர்ம நபர் யார்? அவர் எங்கு தப்பிச் சென்று இருக்கிறார்? என்பதை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Secret information shocked police Ganja plants growing back house auto driver What happened