பெண்கள் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: ராமேஸ்வரத்தில் 2 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது..! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தில், பெண் பக்தர்கள் உடை மாற்றும் கூடத்தில் ரகசிய கேமரா பொருத்திய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எஸ்.பி., பரிந்துரை அடிப்படையில் இந்த உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

நாட்டின் மிக முக்கிய ஆன்மிக தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்று. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், கடலில் நீராடுவது வழக்கம்.

இவ்வாறு நீராடும் பக்தர்கள், அருகேயுள்ள தனியார் உடை மாற்றும் கூடங்களில் சென்று உடை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். இத்தகைய தனியார் உடை மாற்றும் கூடங்களில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அங்கு உடை மாற்றச் சென்ற பெண் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உடை மாற்றும் கூடத்தை நடத்திய மீரான் மைதீன், ராஜேஷ் கண்ணன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து போலீசார் உடனடியாக, அனைத்து உடை மாற்றும் கூடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும்,விடுதிகள், தனியார் கட்டண குளியலறைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் அமல் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Secret camera found in changing room of female devotees


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->