தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அரசு மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' சிறப்பு வார்டுகள் தயார்...! -பொது சுகாதாரத் துறை
Scorching Heat Tamil Nadu Special Heat Stroke Wards Ready Government Hospitals Department Public Health
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்பவாதம் (Heat Stroke) மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்கச் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் வெப்ப அலையால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு தேர்தல் காலம் என்பதால் வெயிலில் பிரச்சாரம் செய்வோருக்குப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 2 படுக்கைகளும், மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிச் சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைப் பாதுகாப்பதற்கான குளிர்சாதனக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிக்கவும், தேவையான மருத்துவ வசதிகளைத் தங்குதடையின்றி வழங்கவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Scorching Heat Tamil Nadu Special Heat Stroke Wards Ready Government Hospitals Department Public Health