புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்!
Schools reopen again in Puducherry Students arrived with enthusiasm
கோடை விடுமுறை முடிந்த பின்னர் புதுச்சேரியில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டுனர்.
இறுதித்தேர்வு, மற்றும் பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு,தமிழகம் புதுச்சேரியில் மே மாதம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி இன்று முதல் தமிழகம், புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அனைத்து பள்ளிகளிலும் இன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.
இத்தனை நாட்கள் கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் காலையே பரபரப்பாக பள்ளிகளுக்கு சென்றனர்.பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. கோடை விடுமுறை முடிந்த பின்னர் புதுச்சேரியில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டுனர். திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள இந்த சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Schools reopen again in Puducherry Students arrived with enthusiasm