திருப்பத்தூரில் பள்ளி வாகனங்களை கதறவிட்ட பலே கில்லாடி! போலீசிடம் சிக்கியது எப்படி?! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே உள்ள கலந்தரா பகுதியில் தனியார் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு வாலிபர் ஒருவர் இன்று காலை சென்றிருக்கிறார். 

மேலும் அவர் நான்தான் ஆர்.டி.ஓ என்றும் பள்ளி வளாகங்களை ஆய்வு செய்ய வந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக வாணியம்பாடி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் வாணியம்பாடி ஆர்.டி.ஓ அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் அவர், ஆர்.டி.ஓ என்ற பெயரில் அங்கிருந்த வாகனங்களை ஆய்வு செய்வது போல்  பணம் பறிக்க முயன்றது தெரிய வந்தது. 

அவரை பிடித்து வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர், மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பதும் திருப்பத்தூரில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த இரண்டு நாட்களில் முன்பு தங்கி ஏலகிரி, வாணியம்பாடி பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்வது போல நடித்து அவர்களிடம் இருந்து பணம் பறித்ததும் தெரிய வந்தது. 

இன்று காலை செல்வகுமார் வக்கணம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தில் ஏறி ஆய்வு செய்வது போல நடித்து பொன்னேரியில் இறங்கியுள்ளார். 

அப்போது பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் அவர்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

இது குறித்து போலீசார் தொடர்ந்து, செல்வகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school vehicles money collected fake RDO


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->