மீண்டும் தலைதூக்கும் மாணவர்களின் அட்டகாசம்! பஸ் மேல்கூரையில் ஏறி ரகளை! - Seithipunal
Seithipunal


சென்னை வேப்பேரியில் அரசு பேருந்து மேற்கூரையில் ஏறி  பள்ளி மாணவர்கள் பாட்டுப்பாடியும் கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  

சென்னையில் சமீப நாட்களாக கல்லூரி மாணவர்கள் ரூட் தல  தகராதில் ஈடுபடுவதும் பேருந்து ரயிலில் அடிக்கடி மோதிக் கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல் காலை மாலையில் பேருந்துகளில் ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது  ஏரி அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்களை அருகில் இருப்பவர்கள் கண்டித்தால் அவர்களையும் கல்லூரி மாணவர்கள் தாக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வேப்பேரில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள்  கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகரப் பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது மாணவர்கள் பேருந்துக்குள் செல்லாமல் படிக்கட்டுகளில் நின்றவாரும் கம்பியில் தொங்கிய படிக்கும் பயணம் செய்துள்ளனர். சில மாணவர்கள் அதற்கும் மேலாக பேருந்தின் மேற்கூறையின் மீது ஏறி நின்று நடமாடிய சம்பவம், அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிர்ச்சடைந்த ஓட்டுநரும் நடத்துனரும் பள்ளி மாணவர்களை பேருந்தில் இருந்து கீழே இறங்க வலியுறுத்தியும்  மாணவர்கள் கீழே இறங்காமல் தொடர்ந்து மேலே நின்று கொண்டு பாட்டுப்பாடியும் கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் தொந்தரவு ஆளாகி பலர் கேள்விகளை எழுப்பினர். அப்போது மாணவர்கள் அடங்காமல் பேருந்து இரும்புகளை தட்டியவாறு கானா பாட்டு பாடிய வாரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் தொடர்ந்து எச்சரித்தும் அடங்காததால் ஓட்டுனர் பேருந்தை நடு ரோட்டில் நிறுத்தியதால் அப்பகுதியில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கியதும் மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது.

மாணவர்கள் பேருந்து மேற்கூரையின் மீது ஏறி அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வீடியோ காட்சியில் உள்ள ஆதரங்களை வைத்து மாணவர்களை அடையாளம் கண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students sing and shout on the roof of a government bus in Chennai Vepery


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->