கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் - பயத்தில் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கணக்கு பாடத்தில் குறைந்த மதிப்பெண் - பயத்தில் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதித்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன்-சுதா தம்பதியினர். இவர்களுடைய மகள் அனுஸ்ரீ. பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருடைய தந்தை முருகேசன் உடல் நலக்குறைவால், ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், அனுஸ்ரீயை, அவரது தாய் வளர்த்து வந்தார்.

இந்த நிலையில், அனுஸ்ரீ கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மாணவியின் வீட்டில் சோதனை செய்ததில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், காலாண்டு தேர்வில் கணக்கு பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதால், அம்மா, அண்ணன் திட்டுவார்கள்.

அதனால், தந்தை சென்ற இடத்திற்கே நானும் சென்று விடுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், சமீபத்தில் முடிந்த காலாண்டு தேர்வு முடிவுகள், வாட்ஸ் ஆப்பில் வெளியாகி இருந்தது.

அதில், அனுஸ்ரீ கணக்கு பாடத்தில், 10 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in putukottai for low mark in maths subject


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->