விளையாட சென்ற சிறுவன் - கழிவுநீர் தொட்டியில் மூழ்கி பலியான கொடூரம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பாரதி தெருவைச் சேர்ந்தவர் வித்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இவரது இளைய மகன் யாம்நாத், பாடியநல்லூரில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

இவர் நேற்று இரவு தனது அண்ணன் மற்றும் தெருவில் உள்ள நண்பர்களுடன் விளையாடச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்பு இருந்த கழிவுநீர் தொட்டியின் மீது பலகை மற்றும் சாக்குப் போட்டு மூடியிருந்தனர். இதனைக் கவனிக்காமல் யாம்நாத் கழிவுநீர் தொட்டி மீது ஏறினார். 

அப்போது, கழிவுநீர் தொட்டி மீது மூடியிருந்த பலகை பாரம் தாங்காமல் உடைந்ததால் யாம்நாத் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூழ்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது அண்ணன் மற்றும் நண்பர்கள் கூச்சலிட்டதை கேட்டு அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் உடனே, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த செங்குன்றம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் யாம்நாத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தவிபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணனுடன் விளையாடச் சென்ற சிறுவன் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died for drowned drainage tank in sengundram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->