12,10 மாணவர்களே ரெடியா? தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி!! - Seithipunal
Seithipunal


தமிழக கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் 12ம் வகுப்புகள்,11ம் வகுப்புக்கள் மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. பொதுத்தேர்வை இந்தாண்டு 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர்.

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடக்கி ஏப்ரல் 8ஆம் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் எழுதியுள்ளனர்.

சமீபத்தில் 12ம் மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் 12ம் வகுப்புக்கு மே 6ஆம் தேதியும் 10ம் வகுப்புக்கு மே 10ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school exam result date announcement


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->