சூடு பிடிக்கும் தேர்தல் பணி.. சத்யபிரதா சாகு தந்த அப்டேட்.. தயாராகும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!!
Sathyaprada Sahu said thatvoting machines testing start next month
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது முதற்கட்ட தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமும் தங்களது முதற்கட்ட தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதே போன்று வாக்காளர் பட்டியலை தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தேவை என்ற கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வாக்குபதிவு இயந்திரங்களின் மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்ததும் தேவையானதைவிட 35 சதவீத கூடுதல் இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமான கிடங்குகளில் வைத்து பாதுகாக்கப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாக்கு பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்பட்டு தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மண்டல வாரியாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை முழு வீச்சில் தொடங்க உள்ளோம்" என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Sathyaprada Sahu said thatvoting machines testing start next month