அடுத்தடுத்து முடக்கப்படும் சொத்துக்கள்.. மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் அதிரடி.! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து, இளவரசியும் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பினர்.

சசிகலா மற்றும் இளவரசி சென்னை வருவதற்கு முன்னரே சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

இன்று (09/02/2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சாவூரிலும் 2 பேரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரன் சொத்துக்களும் அரசுடைமை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala Relation Elavarasi and Sudhakaran Properties Under Taken by Govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal