அதிமுக முன்னாள் அமைச்சருக்கு போன் போட்ட சசிகலா... ஆடியோ அலப்பறைகள்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக சசிகலா அவ்வப்போது அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றி வருவதாக பல ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆனந்தனை தொடர்பு கொண்டு சசிகலா பேசியதாக கூறிய ஆடியோ வெளியாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், " சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பு கிடையாது. கருவாடு மீனாக மாறலாம்., சசிகலா அதிமுகவில் மீண்டும் இணைய முடியாது " என்று கூறி திட்டவட்டமாக பதிலளித்தார். 

இந்நிலையில், கடந்த 1996 ஆம் வருடம் முதல் 1996 ஆம் வருடம் வரை நடைபெற்ற ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கால்நடை, பால்வளம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் உளுந்தூர்பேட்டை ஆனந்தன். 

இவரை செல்போனில் அழைத்து நலம் விசாரித்து சசிகலா, நீங்கள் பழைய ஆளு நான் சீக்கிரம் வருகிறேன்., நான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sasikala Audio Trending Villupuram Ulunthurpet AIADMK Former Minister Anandan 10 June 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->