சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய அரசு தகவல்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் உதவி திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. 

ஆனால் இந்த சேவை பொதுமக்கள் இடையே வரவேற்பை பெறாததால் தற்போது விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதனால் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் சென்னையைபோல் மற்ற ஊர்களில் இருந்து சேலத்திற்கு விமானங்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்நிலையில் சேலத்தில் அடுத்த மாதம் 16ஆம் தேதி முதல் மீண்டும் விமானம் இயக்கப்படுகிறது. இதனை அடுத்து பெங்களூரில் இருந்து காமலாபுரம் விமான நிலையத்திற்கும், சேலத்தில் இருந்து கொச்சிக்கும் விமான சேவை தொடங்குவதற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

பின்னர் சென்னை வழியாக சேலத்தில் இருந்த ஐதராபாத்திற்கு அக்டோபர் மாத இறுதியில் இண்டிகோ நிறுவனம் விமான சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem flight service resumes


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->