சேலம் இரட்டைக்கொலை சம்பவம்..பரபரப்பு வாக்குமூலம்..பீகாரை சேர்ந்த வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லை காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த முதிய தம்பதியை அடித்து கொலை செய்து,  நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதி  பாஸ்கரன் வித்யா.இவர்கள் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது,மனைவி  வித்யா சம்பவ இடத்தில உயிரிழந்து கிடந்தார். கணவர் பாஸ்கரனை போலீஸார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே  உயிரிழந்தார். அதனை தொடந்து போலீசார் முதல் கட்ட விசாரணையில் இருவரும் கொலை செய்யப்பட்டதும்,  மனைவி நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருந்தநிலையில், முதியவர்களை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது  தெரியவந்துள்ளது. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.  கடன் பிரச்சினை காரணமாக இருவரையும் அடித்து கொலை செய்ததாகவும், அவர்களிடம் இருந்து 10 சவரன் செயினை எடுத்துச் சென்றதாகவும் சந்தோஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கடன் தொல்லை காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த முதிய தம்பதியை ஒருவர் அடித்து கொலை செய்து, அவர்களிடமிருந்து நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem double murder incident sensational testimony youth from Perambalur arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->