தமிழில் பேச முடியாததற்கு மன்னித்துவிடுங்கள் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.! - Seithipunal
Seithipunal


தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு சேலம் மாவட்டத்தில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பாஜக இளைஞரணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமை தாங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ், ரவி, இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா மனோஜ், மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், " தமிழில் அதிகளவு பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அழகிய மொழியான தமிழ் மொழியில் பேச முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 

கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி வருகிறோம். நாளுக்கு நாள் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது " என்று தெரிவித்தார். மேலும், தமிழ் புலவர்கள், சித்தர்கள், கவிஞர்கள் குறித்தும் சிறப்பித்து பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem BJP Youth Wing Meeting Central Minister Rajnath Singh Speech 21 Feb 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->