மத்திய அரசின் அறிவிப்பால் விரக்தி... மனவேதனையில் தற்கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. கண்ணீர் சோகம்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 15 வருடங்கள் இயங்கிய வாகனங்கள் காலாவதி பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த ஆட்டோ ஓட்டுநர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை செங்களனை சாலை பகுதியை சார்ந்தவர் சரவணன் (வயது 59). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வந்த சரணவன், சமீபத்தில் பழைய ஆட்டோவை சர்வீஸ் வாங்கி ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் பலரிடம் கடன் வாங்கி இயக்கி வந்த ஆட்டோவை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள், கடனை எப்படி அடிப்பேன் என்று எண்ணி வருத்தமுற்ற சரவணன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் புலம்பி வந்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி உச்சகட்ட விரக்தியில் இருந்த சரவணன் விஷம் குடித்து தற்கொலை செய்யவே, அவரை மீட்ட குடும்பத்தினர் சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில், தற்கொலைக்கு முன்னதாக சரவணன் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தில், " போதியளவு வருமானம் இல்லாததால் கடன் சுமை காரணமாக தவித்ததாகவும், மத்திய அரசின் பழைய வாகனம் தொடர்பான அறிவிப்பால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாவும் தெரிவித்துள்ளார்". இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Auto Driver Suicide due to Central Govt Old Vehicle Announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->