உச்சகட்ட மனவேதனையில் தவித்த 4 பொண்டாட்டிக்காரர்.. விபரீத முடிவால் சோகம்..! - Seithipunal
Seithipunal


3 திருமணம் செய்தவர், 4 ஆவது மனைவி உயிரிழந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டி, சென்னாக்குட்டை பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணி (வயது 66). இவர் ஆடு வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சுப்பிரமணி இளம் வயதில் 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். 

குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் சுப்பிரமணியை விட்டு அடுத்தடுத்து பிரிந்து சென்ற நிலையில், 3 மனைவிகளும் தன்னைவிட்டு பிரிந்து சென்ற காரணத்தால், நான்காவதாக பழனியம்மாள் (வயது 60) என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார். 

இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக பழனியம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

இதனால் மனமுடைந்துபோன சுப்பிரமணி, யாரிடமும் பேசாமல் மேலும் தனிமையில் வாடியுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த்க்கொண்டுள்ளார். இந்த விஷயம் வாழப்பாடி காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

மேலும், சுப்பிரமணியன் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Aged Man Suicide After 4 th Wife Passed Away Health Condition


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal