தூய்மை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்..முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்! - Seithipunal
Seithipunal


சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) மற்றும் தேசிய தூய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kits) முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். 

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE) மற்றும் தேசிய தூய்மை தொழிலாளர்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSKFDC) இணைந்து தொடங்கியுள்ள தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் நடவடிக்கை (NAMASTE) திட்டம், கழிவு நீர் மற்றும் செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதுவை மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் 243 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kits) முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். சபாநாயகர் செல்வம்,  உள்ளாட்சி துறை இயக்குநர்  சாக்திவேல், துணை இயக்குநர் சவுந்திரராஜன், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Safety equipment for sanitation workers Chief Minister Rangasamy provided


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->