கால் செருப்பை கூட மோடியால் தொட்டு பார்க்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு.! 
                                    
                                    
                                   rs barathi speech election campaighn in sri perumbuthur
 
                                 
                               
                                
                                      
                                            ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளார் டிஆர்பாலு அவர்களை ஆதரித்து அமைச்சர் சேகர் பாபு தலைமையில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

"எங்கே மோடி வாலாட்டினாலும் இங்கு ஆட்ட முடியாது, வட மாநிலம், ஆந்திரா என அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் கால் செருப்பை கூட அவரால் தொட்டு பார்க்க முடியாது. பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளதால் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி ஏற்கெனவே நான்கு முறை வந்துவிட்டார். இன்னும் 4 முறை வர உள்ளார். எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பருப்பு வேகாது. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஒரு தேர்தல் வாக்குறுதிக்காகவே ஓட்டு போடலாம்" என்று பேசியுள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       rs barathi speech election campaighn in sri perumbuthur