சென்னையில் சிக்கிய ரூ.31 லட்சம் ஹவாலா பணம் - போலீசார் விசாரணை
Rs 31 lakh hawala money seized in Chennai
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிள் வந்து இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை செய்ததில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் ரூபாய் 31 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஒப்படைத்தனர். மேலும் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பிடிபட்ட இரண்டு பேரிடமும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Rs 31 lakh hawala money seized in Chennai