தஞ்சை செங்கிப்பட்டி பாலத்தில் நடைபெற்ற சாலை விபத்து: பலி எண்ணிக்கை 07ஆக உயர்வு..!
Road accident at Chengipatta Bridge in Thanjavur Death toll rises to 7
கடந்த 21-ஆம் தேதி தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி பாலத்தில் நடந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 07ஆக உயர்ந்துள்ளது. குறித்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 07 வயதான சிறுமி தாஷி உயிரிழந்துள்ளார்.
செங்கிப்பட்டி மேம்பாலத்தின் மேல் தார் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மேம்பாலத்தில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் தற்போது ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி இரவு தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது ஒரு வழிப்பாதையில் எதிரே கர்நாடகாவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

தகவலறிந்து உடனடியாக செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தின் போது பேருந்து மற்றும் வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 06 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து இந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி தாஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Road accident at Chengipatta Bridge in Thanjavur Death toll rises to 7