நெல்லை காவலர்களின் அதிரடி 'வேட்டை'! தொடர் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி...! - 4 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைதானது எப்படி? - Seithipunal
Seithipunal


நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மர்மமாக மாயமான சம்பவங்கள் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின.

கொண்டாநகரம், ராஜீவ்காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவங்களில் மொத்தம் 6 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டதாக தெரியவந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ரஞ்சித், சிவசக்தி நகரைச் சேர்ந்த மகாராஜன் உள்ளிட்ட 6 பேர் சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவலர்கள் மற்றும் தனிப்படை குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர் திருட்டுக்கு காரணமான நபர்களை கண்டறியும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையிலும் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த இசக்கிராஜா (19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (19) ஆகிய 4 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை மீட்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rice police hunt end series robberies How gang 4 arrested cage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->