ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு..வாடிக்கையாளர்கள் மகழ்ச்சி!
Reserve Banks new directive Customers are happy
இனி ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பெரும் அளவில் செயல்படுகின்றன.இதில் உள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது என்பதை நம்மால் காண முடிகிறது. அதற்கு கீழ் உள்ள தொகையினை கேட்டால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்று வருவதால் ஏழை-எளியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் சென்றன.ஏனென்றால் அவர்களது கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில் இதை கருத்தில் கொண்டு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நமது ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அதில்அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது.
English Summary
Reserve Banks new directive Customers are happy