பிரசவத்திற்கு சென்ற முதல் மனைவி.. 3 திருமணம் செய்த கணவன்.. பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


மனைவி இரண்டாவது பிரசவத்திற்கு சென்ற நேரத்தில் வாலிபர் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிங்காரம் இவர் திருப்பூர் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருடன் வேலை செய்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இதனிடையே  சிங்காரத்தின் மனைவி இரண்டாவது பிரசவதிற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சில ஆண்டுகள் ஆகியும் சிங்காரம் தன்னை வந்து அழைத்து செல்லாததால் அவரே திருப்பூர் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது அவர் பிரசவத்திற்கு சென்ற போது வேலையை விட்ட சிங்காரம் அந்த கம்பெனியில் வேலை செய்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

அந்த பெண் உயிரிழந்ததால் அங்கு வேலை செய்து வந்த கோவை மற்றும் மதுரையை சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்துள்ளார்.இந்த விஷயத்தை அறிந்த சிங்காரத்தின் மனைவி மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார் அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Request to take action against a man who married 2 women without the knowledge of his wife


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal