நிர்மலா சீதாராமன் பெயரில் இருந்த பெயர்ப்பலகை திடீர் அகற்றம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் லாந்தை ஊராட்சியைச் சேர்ந்த பெரியதாமரைக்குடி, சின்ன தாமரைக்கொடி கிராமங்களுக்கு இடையே ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று செல்கிறது. இந்த சுரங்கப்பாதை முழுவதும் மழைக்காலங்களில், நீர் தேங்கிவிடுவதால், மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்தது. 

இந்த பகுதியில், மக்கள் மேம்பாலம் ஒன்றை கட்டித்தர வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் காரை அப்பகுதி மக்கள் வழிமறித்து, பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

அப்போது, இதுகுறித்து மனுவாக கொடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தன் படி, மக்கள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைகளால், இரண்டு நாட்களில் மேம்பாலம் கட்ட ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டு, மேம்பால வேலைகள் விரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் மற்றும் உள்ளூர் மக்கள், அந்த சாலைக்கு ‘நிர்மலா சீதாராமன் சாலை’ என்று பெயர்ப்பலகை அமைத்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

இதற்கு பிற கட்சியினர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அந்த பெயர்ப்பலகை உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

remove nirmala seetharaman road name board in ramanathapuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->