காத்திருந்த பயணிகளுக்கு நிம்மதி...! - துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீண்டும் சேவை துவக்கம்..! - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் உலக விமானப் போக்குவரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அமீரகத்துக்கான வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருந்தன. இந்த சூழலில், இந்தியாவில் இருந்து சேவைகளை வழங்கி வந்த ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி 28 முதல் தங்களது அனைத்து வர்த்தக விமான சேவைகளையும் முழுமையாக நிறுத்தியிருந்தன.

ஆனால் பயணிகளின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மட்டுமே குறிப்பிட்ட சில சிறப்பு விமானங்களை இயக்கி வந்தது. இதற்கிடையில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்ததால், அந்த குறைந்தளவிலான சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பெரும் சிரமத்தில் சிக்கியிருந்தனர்.

முன்னதாக மே மாதம் 1-ஆம் தேதி முதல் வழக்கமான விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே மகிழ்ச்சி அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) முதல் துபாய்–திருச்சி இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்புடன், பயணிகளுக்கான இணையதள முன்பதிவும் துவக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் சற்றே உயர்வாக இருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி சேவை மீண்டும் தொடங்கியிருப்பது வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய சேவை அட்டவணைப்படி, துபாய் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2-இல் இருந்து ஐ.எக்ஸ்–6622 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அமீரக நேரப்படி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 2.55 மணிக்கு துபாய் சென்றடையும் வகையில் அட்டவணை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய (ஞாயிற்றுக்கிழமை) சேவைகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், திங்கட்கிழமை முதல் தொடர்ந்து விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன என்றும், அதற்கான முன்பதிவு வசதிகள் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Relief waiting passengers Air India Express service from Dubai Trichy resumes


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->