புவி வெப்பமாவதால் கடல்மட்டம் உயர்வு; கொல்கத்தா, மும்பையில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வீடுகளை நிரந்தரமாக இழக்கும் அபாயம்; ஐ.நா எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


முன்பு எப்போதும் இல்லாதவாறு புவி வெப்பமாதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எல் நினோ தாக்கம் உலகை அச்சுறுத்தியுள்ளது. புவி வரலாறு கனத்த அளவு வெப்பமடைந்துள்ளதால், பனிப்பாறைகள் உருகுவதும், கடல் நீர் வெப்பமடைந்து விரிவடைவதும் போன்ற அபாயங்கள் நிலவுகிறது,

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய கடல்மட்டம் 5.9 மி.மீ உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் (770 மில்லியன் மக்கள்) கடலோரப் பகுதிகளில் வசித்து வருவதால் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும், நாடுகளும் அரசுகளும் உடனடியாக ஒருங்கிணைந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

அந்தவகையில், இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பை, வங்கதேசத்தின் தாகா உள்ளிட்ட தெற்காசியாவின் தாழ்வான டெல்டா பகுதிகளில் 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் நேபாளத்தில் பெரு வெள்ளம் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ஆம் தேதி திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இமயமலையில் பனிப்பாறை உடைந்து திபெத் வழியாக நேபாளத்தில் பாயும் போடேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN warns that nearly 20 million people in Kolkata and Mumbai could permanently lose their homes due to rising sea levels


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->