நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைவுக்கு காரணம் குறித்து உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசும்போது, ''தமிழகத்தில் 32 நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதை, 14 நீதிமன்றங்களாக குறைப்பதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று சுட்டிக்காட்டினார். 

இந்நிலையில், வழக்கு எண்ணிக்கைகள் சில இடங்களில் குறைந்துள்ளதாகவும், சொந்த கட்டிடங்களில் நீதிமன்றம் இயங்கவில்லை. எனவே, நிதிச் சுமையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நுகர்வோர் நீதிமன்றத்தை, திருவண்ணாமலைக்கு மாற்றப் போவதாக தகவல்கள் வருகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களை மாற்றக் கூடாது என்று பேசினார்.

இதற்கு உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், பதிலளித்து பேசுகையில் கூறியதாவது;

''நுகர்வோர் தொடர்பான வழக்குகள் குறைவதை எண்ணி நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு குறைவாக இருக்கிறது என்றால் மக்கள் விழிப்புணர்வாக இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தவறு செய்ய முடியாது என்பதால், விற்பனை மையங்கள் தவறு செய்யக் கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்றன. இதன் காரணமாக நுகர்வோர் நீதிமன்றங்களில் குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்கள் குறையக் குறைய நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைவதுதான் சரியானது. குற்றங்கள் அதிகரிக்கும்போது நீதிமன்றங்கள் அதிகப்படுத்தப்படும்.'' என்று சுட்டிக்காட்டி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Food Minister Venkataramanan explains the reason for the lack of consumer courts


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->