ரெட் அலர்ட்..உதகையில் இன்று சுற்றுலா தளங்கள் மூடல்!
Red alert Tourist spots will be closed in Udagai today
அதி கனமழை காரணமாக நீலகிரியில் இன்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
நீலகிரியில் நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவானது.தலையாட்டு மந்து, ஊட்டி படகு இல்லம் பகுதி, கோத்தகிரி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவுவதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன.
மேலும் மலர் கண்காட்சியின் கடைசி நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், கூட்டம் அதிகரித்தது. இந்தநிலையில் அதி கனமழை காரணமாக நீலகிரியில் இன்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
English Summary
Red alert Tourist spots will be closed in Udagai today