சன்யாசித்தோப்பில்‘U’வாய்க்காலை மறுமுறைக் கட்டுதல் பணி..அனிபால் கென்னடி எம் எல் ஏ தொடங்கி வைத்தார்!
Reconstruction of U channel at Sanyachithoppu Anibal Kennedy launches M LA
சன்யாசித்தோப்பு ‘U’வாய்க்காலை மறுமுறைக் கட்டுதல் பணிக்கான பூஜையை மயான சாலை சன்யாசித்தோப்பில் அனிபால் கென்னடி ஏம் எல் ஏ அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி, உப்பளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்யாசித்தோப்பு மயானம் சாலையில் அமைந்துள்ள ‘U’ வடிவ வாய்க்காலில் மறுமுறைக் கட்டுதல் பணிகள் மேற்கொள்ள அப்பகுதி மக்கள் சட்ட மன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர், அதை ஏற்ற சட்ட மன்ற உறுப்பினர் புதுச்சேரி நகராட்சி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2023–24) கீழ், ரூ.19,78,780 ரூபாய் ஒப்பந்தத் தொகையுடன் இந்தப் பணி தொடங்கப்படுகிறது.
இந்த பணிக்கான பூஜை விழா இன்று உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திரு. V. அனிபால் கென்னடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர் முன் நின்று பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார், நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மொத்தமாக நான்கு மாதங்களில் பணிகள் நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. உடன் நகராட்சி இளநிலை பொறியாளர் சண்முகம், கழக தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் இசாக்கு, ராகேஷ், கழக சகோதரர்கள் மோரிஸ் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Reconstruction of U channel at Sanyachithoppu Anibal Kennedy launches M LA