பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் - ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ந் தேதியான இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இது குறித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இதை அடுத்து நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் எல்.ரமேஷ் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.

அதிலும், எந்த உடன்பாடும் ஏற்படாததால் அதுவும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இன்று முதல் திட்டமிட்ட படி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் 15 ஆயிரம் பேருந்துகள் ஓடாது என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் அரசு கோரிக்கை வைத்தால் பகலிலும் ஆம்னி பேருந்துகளை இயக்க தயார் என்று தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ready to amni bus run in taminadu at day time


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->