பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய ரஞ்சனா நாச்சியார் கைது.!!
Ranjana Nachiyar arrested for attacking students
பாஜக பிரமுகரும் துணை நடிகையுமான ராஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் மேற்கொண்டதை பார்த்த அரசு பேருந்து வழிமறித்ததோடு பேருந்து ஓட்டுனரையும், நடத்துனரையும் அவதூறாக பேசி அர்ச்சனை செய்தார். மேலும் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார்.

வழக்கறிஞரான ரஞ்சனா நாச்சியாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த செயலை ஒரு தரப்பினர் சிங்கப் பெண் என்றும் புகழ, மற்றொரு தரப்பினர் அத்துமீறிய மாணவர்களை தாக்கிய ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசார் அரசு பேருந்தை வழிமறித்தது, கண்டக்டர், டிரைவரை அவதூறாக பேசியது, மாணவர்களை தாக்கியது உள்ளிட்ட புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

தலைமறைவாக இருந்த ரஞ்சனா நாச்சியாரை இன்று காலை போலீசார் கைது செய்ய முப்பட்டபோது போலீசார் உடன் வரமாட்டேன் என அடம்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ரஞ்சனா நாச்சியார். அதனை பொருட்படுத்தாத பெண் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Ranjana Nachiyar arrested for attacking students