ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.,க்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. 

நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது. இதே போல் நடிகர் நடிகைகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உண்டாகியுள்ளது. 

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ்.,க்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை கரகரப்பு ஏற்பட்டதால் கொரொனா  பரிசோதனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு, கொரோனா  நோய்த் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipettai district collector affected corona


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal