என் செல்லத்தை என்னோட அனுப்பி வைங்கடா.. கள்ளகாதலியின் இல்லத்தில் தகராறு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் நரசிங்கபுரம் பகுதியை சார்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் (வயது 28). சோளிங்கர் பகுதியை சார்ந்த பெண்மணி ரம்யா (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், எடிசனிற்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை உள்ள நிலையில், ரம்யாவிற்கும் அருண் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அருண் - ரம்யாவிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, எடிசனும் - ரம்யாவும் சேர்ந்து ரம்யாவின் கணவர் அருணை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை விவகாரத்தில் கள்ளக்காதல் ஜோடிகள் சிறைக்கு சென்று வெளியே வந்த இருவரும், தங்களின் தொடர்பை கைவிட இயலாது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பெங்களூருக்கு வந்து தங்கியிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ரம்யா மீண்டும் ராணிப்பேட்டைக்கு வந்து சகோதரி லதாவுடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று எடிசன் லதாவின் இல்லத்திற்கு சென்று ரம்யாவை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லதா இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தாமஸ் ஆல்வா எடிசனை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet illegal affair man talking fight in affair girl house police arrest


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal