#ராணிப்பேட்டை : 7 ஆண்டுகள் முயன்றும் முடியவில்லை, தூக்கில் தொங்கிய இளைஞரால் சோகம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் அருகே புளியந்தாங்கல் கிராமத்தின் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் நெல்லிக்குப்பம் சிப்காட்டில் இருக்கின்ற ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க வினோத்தின் உறவினர்கள் கடந்த 7 ஆண்டுகளாக வரன் பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும், வினோத்திற்கு பொருத்தமான வரன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக வினோத்துக்கு திருமணம் ஆகவில்லை. இந்த விரக்தியில் வினோத் இருந்து வந்துள்ளார்.

இத்தகைய நிலையில், நேற்று தன்னுடைய வீட்டில் வினோத் தூக்கில் தொங்கியுள்ளார். இதைக் கண்ட குடும்பத்தினர் பதறிப்போய் அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு, வினோத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

அதன் பின், இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த சிப்காட் காவல்துறை மருத்துவமனைக்கு விரைந்து வந்து வினோத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாக விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet 32 years men hanging up who sad about his unmarried life


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->