இராமேஸ்வரத்தில் திடீர் பரபரப்பு.! கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வழக்கத்துக்கு மாறாக சுமார் 10 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது.

இதனால் அந்த பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

சுமார் 10 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி இருப்பதால் நட்சத்திர மீன், சிப்பி, சங்கு உள்ளிட்டவைகள் வெளியே தெரிந்துள்ளது.

மேலும் கடற்கரை பகுதி ஓரமாக உள்ள பாறை பகுதிகளும் மக்களின் கண்களுக்கு தென்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளனர். திடீரென கடல் உள்வாங்கி இருப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கடல் உள்வாங்கி இருப்பதால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் சற்று தூரம் நடந்து சென்று தீர்த்தம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rameshwaram sea may 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->