ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை மீனவப்பெண் எரித்து கொலை.. மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்.!
Rameshwaram fisher women raped and death fisherman protest
ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து 45 வயது மீனவப்பெண் எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்க சென்ற 45 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்
சந்தேகத்தின் பேரில் 6 வட மாநில இளைஞர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வடகாடு கடல் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து மீனவப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வடகாடு மீனவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், உயிரிழந்த மீனவப்பெண்ணின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
English Summary
Rameshwaram fisher women raped and death fisherman protest