ரஜினி பேச்சில் தப்பில்லை.. பெரியார் ஒரு தர்ம விரோதி தான்..! சொன்னது யாரு தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


மீபத்தில் நடிகர் ரஜினி 'துக்ளக்' விழாவில் அந்த பத்திரிக்கையின் பெருமைகளை பற்றி மேடையில் பேசி இருந்தார். அதில் குறிப்பிட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த 1971 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பெரியார் தலைமையிலான அப்போதைய ஆளும் கட்சி திமுகவின் ஆதரவோடு மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் மாநாடு என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற்றது என்று கூறினார்.

Image result for rajini seithipunal

அந்தப் பேரணியில் இந்து கடவுள்களான ராமர் மற்றும் சீதையை ஆடைகளற்ற நிலையில், செருப்பு மாலை அணிவித்தும், சிவன் மற்றும் பார்வதியை ஆடையின்றி செருப்பு மாலை அணிவித்து இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தினார்கள். இந்த சம்பவத்தை அந்த காலகட்டத்தில் இருந்த எந்த ஒரு பத்திரிக்கையும் பிரசுரிக்கவில்லை. ஆனால் அப்போதே சோ நடத்திய 'துக்ளக்' பத்திரிக்கையில் அட்டைப்படமாக போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார் என்று ரஜினி பேசியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி பெரியாரை இழிவு படுத்தியதாகவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தரப்பு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  நான் உண்மையை பேசியதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாததை ஒன்றும் நான் சொல்லவில்லை. 1971 ம் ஆண்டு ராமர் சீதை சிலை உடையில்லாமல் கொண்டுவரப்பட்டது உண்மை தான் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய அவர்,  இது மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை, மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி ராமானுஜ ஜீயர், ‘பெரியார் குறித்து ரஜினி பேசியதில் தவறு ஏதுமில்லை. பெரியார் ஒரு தர்ம விரோதி என்று கூறியுள்ளார். மேலும் தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். பெரியார் குறித்து ஜீயர் கூறியதற்குப் பெரியார் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramanuja jeeyar about rajini issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->