என் ஏரியாவுல சாக்கடையை சுத்தம் பண்ணல.. நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக களத்தில் இறங்கிய ச.ம.உ.! - Seithipunal
Seithipunal


வீடு அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி சட்டமன்ற உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இராமநாதபுரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன். இவரின் வீடு அங்குள்ள வண்டிக்காரன் தெரு பகுதியில் இருக்கிறது. இந்த தெருவிற்கு அருகில் உள்ள 26 ஆவது வார்டு பகுதியில், பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேற இயலாமல் நீர் வீதிகளில் தேங்கியுள்ளது. 

இதனால் வீதி முழுவதும் சாக்கடை நீர் நிரம்பி துர்நாற்றம் வீசும் நிலையில், நகராட்சி அதிகாரிகள் கழிவு நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் அங்குள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். 

இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே, தனியார் கழிவுநீர் அகற்றும் ஊர்தி மூலம், நகராட்சி அதிகாரிகள் சாக்கடை நீரை வெளியேற்றவே, சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தனது தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Manikandan MLA Dharna Protest clean Drainage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal