இராமநாதபுரம்: ஏ.டி.எம்மில் பணத்தை கொள்ளையடிக்க வந்தவனை, வந்தவழி ஓடவிட்ட காவலாளி...!  
                                    
                                    
                                   Ramanathapuram Karur Vysya Bank ATM Robbery attempt 
 
                                 
                               
                                
                                      
                                            ராமநாதபுரம் நகரில் உள்ள ரோமன் சர்ச் பகுதியில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கும் வசதி மற்றும் பணம் செலுத்தும் வசதியும் இருக்கிறது. 
இந்த ஏ.டி.எம் மையத்தில் வீரபத்திரசுவாமி கோவில் தெருவைச் சார்ந்த ருத்ரபதி என்பவர் காவலாளியாக இருந்துள்ளார். கடந்த 3 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் கைலி மற்றும் பனியன், ஹெல்மெட் அணிந்தவாறு ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவன், காவலாளியிடம் ஏ.டி.எம் மையத்தின் சிசிடிவி கேமராக்களை நிறுத்துமாறும், மின்விளக்குகளை அணைக்குமாறும் கூறியுள்ளான்.
இதற்கு காவலாளி மறுப்பு தெரிவிக்கவே, அவர் ஏ.டி.எம் மையம் எச்சரிக்கை அலாரத்தை ஒழிக்க வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளான கொள்ளையன், தனது கையில் கொண்டு வந்த இரும்பு ராடை வைத்து காவலாளியை தாக்கி உள்ளான். 

இதனையடுத்து கொள்ளையனிடம் இருந்து தப்பி செல்வது போன்று, ஏ.டி.எம் மையத்தின் கதவை மூட முயற்சித்த நிலையில், ஆவேசமடைந்த கொள்ளையன் அவரை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதன் பின்னர், கதவை திறந்து காவலாளியின் பிடியில் மாட்டிக் கொண்ட கொள்ளையனை அவனது தலைக்கவசத்தை கழற்றி காவலாளி தாக்குகிறார். 
அவனது கைகளில் இருந்த ஆயுதத்தையும் பிடுங்கி, அவனை அடித்து வெளியே துரத்தி உள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், காவலாளியை வங்கி அதிகாரிகளும், காவல்துறையினரும் பாராட்டி வருகின்றனர். மேலும், காவலாளியின் வீர செயலால் பல லட்சம் பணமும் தப்பியுள்ளது. தப்பியோடிய கொள்ளையனை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். 
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Ramanathapuram Karur Vysya Bank ATM Robbery attempt