20 வயது இளம்பெண்ணை நாடக காதலால் ஏமாற்றி, ஓட்டம் பிடித்த திருமணம் முடிந்த காமுகன்.. சாயல்குடியில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சார்ந்தவர் முனியப்பா. இவரது மகன் கோட்டைசாமி. கோட்டைசாமிக்கு தங்க முனியம்மாள் என்ற மனைவி மற்றும் 8 வயதுடைய கலையரசன் என்ற மகனும் இருக்கின்றனர். 

இந்த நிலையில், கோட்டைசாமிக்கும், அங்குள்ள அல்லிக்குளம் கிராமத்தை சார்ந்த முனியசாமியின் மகள் மூகாம்பிகைக்கும் (வயது 20) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் மீதுள்ள மோகத்தால், அவரை தனது நாடக காதல் வலையில் காமுகன் விழவைத்துள்ளான். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி கோட்டைசாமியும் - மூகாம்பிகையும் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த மூகாம்பிகையின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் கோட்டைசாமியின் மீது கடத்தல் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மூகாம்பிகையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கோட்டைசாமியின் இல்லத்திற்குள் புகுந்து வீட்டினை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கோட்டைசாமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram illegal Affair Couple Missing Police Investigation


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal