மகளையும், பேரப்பிள்ளைகளையும் கண்முன்னே கொடுமை செய்த மருமகன்.. கொதித்தெழுந்த மனதால் மரணம்.! - Seithipunal
Seithipunal


மது போதையில் தகராறு செய்த மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் எமனேஸ்வரம் கேணிக்கரை பகுதியைச் சார்ந்தவர் நாகநாதன். பரமக்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. கருப்பையாவின் மகள் சங்கீதாவிற்கும், நாகநாதனிற்கும் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதிகள் இருவரும் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிராமத்தில் வசித்து வரும் நிலையில், அண்டக்குடி அங்கன்வாடியில் சத்துணவு அமைப்பாளராக சங்கீதா பணியாற்றி வருகிறார். 

சங்கீதாவின் கணவர் நாகநாதன் தினமும் மது அருந்திவிட்டு குழந்தைகள் மற்றும் மனைவியை அடித்து கொடுமை செய்து வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சங்கீதா தனது தந்தையிடம் கூறி அழவே, இந்த விவகாரம் தொடர்பாக நாகநாதனை கருப்பையா எச்சரித்துள்ளார். 

இருந்தாலும், மது பழக்கத்தை விட மறுத்த நாகநாதன் போதையில் மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக எமனேஸ்வரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் நாகநாதனை அழைத்து மனைவியுடன் சமரசமாக சென்று குடும்பத்தை கவனிக்குமாறும், மதுபழக்கத்தை இனி வரும் நாட்களில் கைவிடுமாறும் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த நாகநாதன் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று, மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன்போது, எதேர்சையாக மகள் வீட்டிற்கு சென்ற கருப்பையா, தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மருமகனால் தாக்கப்படுவதை கண்டு கொந்தளித்துள்ளார். 

உச்சகட்ட ஆத்திரத்துக்கு சென்ற கருப்பையா, அங்கிருந்த அரிவாளை எடுத்து மருமகன் நாகநாதனை வெட்டி கொலை செய்து எமனேஸ்வரம் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து, விஷயத்தை கேட்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நாகநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Emaneswaram Murder Police Investigation 5 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal